ஆப்பிரிக்க பல்கலைக்கழகத்துடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை, பிப்.21: ஆப்பிரிக்க நாட்டு புருண்டியில் உள்ள ஹோப் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகத்துடன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ். குருஷங்கர், ஹோப் ஆப்பிரிக்கா பல்கலைக்கழக ரெக்டார் டாக்டர் விக்டர் பரான்டோடா சமீபத்தில் ஆப்பிரிக்காவில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன், மருத்துவமனையின் ஆபரேஷன்ஸ் பொதுமேலாளர் ஜே.ஆடல், பல்கலை ரெக்டார் டாக்டர் விக்டர் பரான்டோடா இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.இதன்படி ஹோப் ஆப்பிரிக்கா பல்கலைக் கழகத்தில் மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவர்களுக்கு குறிப்பிட்ட சில பாடத்திட்டங்களை உருவாக்கித் தருவது, மருத்துவ ஆய்வுக்கூடங்களை நிறுவித்தருவது, கல்வி மற்றும் பயிற்சியில் தனது ஆதரவை நல்குவது முடிவானது. மேலும், தொலைமருத்துவம், புற்றுநோய் சிகிச்சை மற்றும் சிறப்பு துறைகளில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆலோசனை வழங்கும். குறைந்த கட்டணத்தில் மருத்துவ முகாம்களையும் ஆப்பிரிக்காவில் நடத்தும்.* மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.குருஷங்கர் கூறும்போது, ‘‘இணைந்து செயலாற்றும் இந்த வாய்ப்பு, இருதரப்பிற்கும் நன்மை பயக்கத்தக்கதாகும்” என்றார்.* பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யமுரேமி புல்ஜென்ஸ் கூறும்போது, “மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள் உத்வேகம் தருகிறது’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: