மாணவரின் பேக்கை திருடியவரை காட்டிக்கொடுத்தது சிசிடிவி

திருச்சி, பிப்.20: திருச்சி நத்தர்வலி தர்கா பகுதியில் வசிப்பவர் அப்துல்குத்தூஸ்(19), கல்லூரி மாணவர். சம்பவத்தன்று இவர் பெரம்பலூர் செல்வதற்காக சத்திரம் பஸ் நிலையம் சென்றார். அங்கு பஸ்சில் சீட்டை பிடித்து, அதில் தனது பேக்கை வைத்துவிட்டு கீழே நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த பேக்கை எடுத்துக்கொண்டு ஓடினார். இதைக்கண்ட அப்துல் குத்தூஸ் அவரை விரட்டிச்சென்றார். ஆனால் பிடிக்க முடியவில்லை. அந்த பேக்கில் லேப்டாப், செல்போன் இருந்தது. இதுபற்றி அப்துல்குத்தூஸ் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, பேக்கை திருச்சென்றது புதுக்கோட்டை ஆலங்குடி ரோடு காந்தி நகரை சேர்ந்த விஜயகுமார்(45) என்பது தெரியவந்தது.மேலும் விஜயகுமார் பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த விமல்சைமா, முதலியார் சத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்(26) ஆகியோரது வீடுகளிலும் புகுந்து செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: