கோழி, ஆடு, மீன்வளர்ப்பு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தொடங்கி வைத்தார்

காரைக்கால், பிப்:19: காரைக்கால் சேத்தூர் கிராமத்தில், கோழி, ஆடு, மீ வளர்ப்பு மற்றும் தோட்டம் அமைப்பு உள்ளிட்ட, மகளிர் குழுக்களின் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் நிகழ்ச்சியை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.காரைக்கால் திருநள்ளாற்றை அடுத்த சேத்தூர் கிராமத்தில், அண்மையில் மகளிர் குழுவினர், அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, சேத்தூர் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அந்த இடத்தில், மகளிர் குழுக்கள் சார்பில், காய்கறி தோட்டம், தீவனப்புல் வளர்ப்பு, கோழி, ஆடு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் வகையில், நிலம் சீரமைப்பு, குளம் வெட்டுதல் பணியை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, துணை கலெக்டர் ஆதர்ஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் லதா மங்கேஸ்கர், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: