மல்லிகைப்பூ விலை குறைவு விவசாயிகள் கவலை

கரூர், பிப். 19: மல்லிகைப்பூ விலை குறைந்துவருகிறது.கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம். புகழூர் வட்டாரத்தில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூர் பூக்கள் ஏலச்சந்தைக்குகொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மல்லிகைப்பூ விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ ரூ.800க்கு போனது. இந்த வாரம் ரூ.300 ஆக குறைந்து விட்டது. சம்பங்கி ரூ.50ல் இருந்து ரூ.65 ஆனது. அரளிப்பூ கிலோ ரூ.60ல் இருந்து 80 ஆகவும், ரோஜா கிலோ ரூ.60ல் இருந்து ரூ.90 ஆகவும் உயர்ந்தது.பெங்களூர் மல்லிரகம் கிலோ ரூ.800ல் இருந்து ரூ.300ஆக குறைந்தது. செவ்வந்தி கிலோ ரூ.80ல் இருந்து ரூ.300 ஆக விலை உயர்ந்தது,, மல்லிகைப்பூக்கள் ஏலத்தில் விலை குறைந்துள்ளதால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: