கும்மிடிப்பூண்டி, பிப்.18: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை சார்பாக பல்வேறு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு பயிற்சி மற்றும் தேர்வு கையேடு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பொது தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு பயிற்சி மற்றும் தேர்வு கையேடு வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பாடவாரியாக தேர்வுக்கு தயாராவது, அதிக மதிப்பெண் பெறுவது குறித்து விளக்கினர்.