அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்

அரியலூர்,பிப்.17: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பரணம் கிராமத்தில் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தின் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செழியன், சிவசங்கர், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் பெயர்பலகை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில், தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடரில் சென்ற ஆண்ட விட இந்த ஆண்டு வேளாண்மை கடன் ஆயிரம் கோடி அதிகமாக அறிவித்துள்ளனர். அதனை வரவேற்கிறோம், ஏரிகளை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தென்கிழக்கு பருவமழைக்கு முன்னதாக தமிழக அரசு ஏரிகளை முன் கூட்டியே தூர்வார வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மூன்று தாலுகாவில் அதிகளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படாமல் கடலூரில் அமைத்துள்ளனர். இதன் துணை நிறுவனத்தையாவது அரியலூர் மாவட்டத்தில் திறக்க வேண்டும். மானாவாரியாக பயிர் செய்யப்படுகின்ற உளுந்து, மிளகாய், எள், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளத்திற்கு விலை குறைவாக உள்ளது. இதனை அரசு உயர்த்தி நிரந்தர விலை அறிவக்க வேண்டும். வேளாண்மைதுறை, தோட்டக்கலைதுறை, பொறியியவிவுறை தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகளுக்கு செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லதம்பி, பரணம் கிளை தலைவர் இராதாகிருஷ்ணன், செயலாளர் அம்பிகாபதி, பொருளாளர் இராஜமாணிக்கம், துணைத்தலைவர் அன்பழகன், செயலாளர் இராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி வரவேற்றார், முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Related Stories: