ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை கிளை நிலையம் திறப்பு

பள்ளிப்பட்டு, பிப். 17: ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை கிளை நிலைய திறப்பு விழா நடந்தது.ஆர்.கே.பேட்டை அருகே ஜனகராஜகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள,  கால்நடை கிளை நிலைய திறப்பு விழா நடந்தது. அதில், திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் தாமோதரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி வரவேற்றார். விழாவில், பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட 203 பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வெள்ளாடுகளை பி.எம்.நரசிம்மன் வழங்கினார். இதில், திருவள்ளூர்-காஞ்சிபுரம்  மாவட்ட பால்வள பெருந்தலைவர்  வேலஞ்சேரி த.சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.பாண்டுரங்கன், கால்நடை உதவி மருத்துவர்கள், பயனாளிகள், கிராமமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: