திருச்சியில் 14ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, பிப்.12: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகள் வழங்க உள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த 18 வயது நிரம்பிய 35 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்கும் வேலைநாடுநர்கள் தங்களது அசல் நகல் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரவேண்டும். இந்த முகாமை வேலைநாடுநர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: