சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் காவலர் நண்பர்கள் குழு பயிற்சி முகாம் துவக்கம்

காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவலர் நண்பர்கள் குழு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த 1ம் தேதி காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் தமிழகத்திலேயே முதல்முறையாக 8 கல்லூரி மாணவிகள் இணைந்தனர். இதைதொடர்ந்து காவலர் நண்பர்கள் குழுவுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் எஸ்பி சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கார்த்திகேயன் வரவேற்றார், காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டிஐஜி தேன்மொழி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துக்கி வைத்தார்.

தொடர்ந்து, காவலர் நண்பர்கள் குழுவின் பணிகள் குறித்த விளக்கங்களையும் கல்லூரி மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து எவ்வாறு பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து பேசினார். சென்னை காவலர் நண்பர்கள் குழு பயிற்சியாளர்கள் உமாமகேஸ்வரி, ரமேஷ் ரிஷி, நாகராஜ் ஆகியோர் காவலர் நண்பர்கள் குழுவில் இணைந்தவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தனர். காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவி டிஎஸ்பி அலெக்சாண்டர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு ஏஎஸ்பி பொன்ராம் நன்றி கூறினார்.

Related Stories: