மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி மாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை ஏலம் ஏராளமானோர் போட்டா போட்டி

மணப்பாறை, பிப்.7: மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி மாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை நாளை ஏலம் விடப்பட உள்ளதால் இதனை ஏலம் எடுக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போட்டி போட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் .மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டியில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பு உள்ள திடலில் இம்மாத இறுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இந்நிலையில் இக்கோயிலின் காளை ஒன்று மதுரை, சிவகங்கை - திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பல பரிசுகளை பெற்றுள்ளது. இந்த காளையை கிராமத்தினரின் அனுமதியுடன் பராமரித்து வரும் நபர் தற்போது காளையை கோவில் முக்கியஸ்தர்களிடமே ஒப்படைத்து விட்டார். இதனால், காளையை நல்ல முறையில் பராமரிக்கும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) மாலை பெளர்ணமி பூஜை முடிந்தவுடன் நாட்டாண்மை ராமச்சந்திரன், மணியக்காரர் சின்னத்துரை, ஊர் கவுண்டர் அழகு சுப்பிரமணி முன்னிலையில் காளையை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். வாடிவாசலிலிருந்து ஆவேசத்துடன் பாயும் இந்த கோயில் காளையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

Related Stories: