வத்தலக்குண்டு ஊராட்சி தலைவருக்கு ஐ.பெரியசாமி வாழ்த்து

வத்தலக்குண்டு, பிப்.7: வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி நேற்று வந்தார். ஊராட்சி ஒன்றிய தலைவராக பெறுப்பேற்ற திமுக.வின் பரமேஸ்வரி முருகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்து, திமுக கவுன்சிலர்கள் விஜயகர், பெனினாதேவிசரவணன், சூசைரெஜி, செல்லம்மாள், சக்திவேல் ஆகியோருக்கு வாழ்த்து கூறினார். கூட்டங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவருடன் ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், நகர செயலாளர் சின்னதுரை, பத்திர எழுத்தர் சங்க தலைவர் சிதம்பரம், தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் வந்திருந்தனர்.

Related Stories: