ஏலகிரி மலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

* கலெக்டர், போக்குவரத்து முதன்மை செயலர் பங்கேற்பு

ஜோலார்பேட்டை, பிப்.4: ஏலகிரி மலையில் நடந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தி்ல் போக்குவரத்து முதன்மை செயலர் ஜகவர், கலெகட்ர் சிவன் அருள் கலந்து கொண்டனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தந்தை பெரியார் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து முதன்மை செயலர் டி.எஸ்.ஜவகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் ம.ப.சிவன்அருள், எஸ்பி விஜயகுமார் மற்றும் கல்வித்துறை, மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில் கலெக்டர் ம.ப.சிவன் அருள் துறை சார்ந்த பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதனையடுத்து போக்குவரத்து ஆணைய முதன்மை செயலாளர் டி.எஸ்.ஜவகர் பேசுகையில், ‘தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்குள்ளேயே பொது விநியோகம் திட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக 99.6 சதவீதம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.  தற்போது புதிதாக பணியில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருவதால் தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழும் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: