நாகை இஜிஎஸ்.பிள்ளை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் 6ம் ஆண்டு நினைவு தினம்

நாகை, ஜன.31: நாகை இஜிஎஸ்.பிள்ளை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் செவாலியே டாக்டர் இ.ஜி.எஸ்.பிள்ளை ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜி.எஸ்.பிள்ளையின் முழு உருவசிலைக்கு நிறுவன தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் பரமேஸ்வரன், முதன்மை செயல்அலுவலர் முனைவர் சந்திரசேகர், முதல்வர் ராமபாலன், துணை முதல்வர் மோகன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாசம் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கல்லூரி நிர்வாகம் சார்பாக செயலர் பேசுகையில், அய்யா அவர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து இம்மாவட்ட மக்களுக்கு கல்வி பணியாற்றியதையும், இம்மாவட்ட மக்களுக்கு படிக்க இயலாத தகுதியான மாணவர்களுக்கு இலவச கல்வியையும் கொடுத்து கல்வி செம்மலாக திகழ்ந்தார் என நினைவு கூர்ந்தார். மேலும் முதல்வர் ராமபாலன் பேசுகையில், அய்யா அவர்கள் கல்விப்பணி மட்டுமின்றி கல்லூரி அருகாமையில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டிற்காக பல உதவிகளையும் ெசய்து வந்துள்ளார் என நினைவு கூர்ந்தார். சிறப்பு விருந்தினராக அறக்கட்டளை உறுப்பினர் சங்கர் கணேஷ் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார். மேலும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நிறுவனர் நினைவுதின நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்களும், ஆய்வக, அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: