நோய் தாக்குதலால் பருத்தி மகசூல் பாதிப்பு

தேவதானப்பட்டி, ஜன.28: தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் நோய் தாக்கியதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கிணற்றுப்பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில்  நடப்பாண்டில் பருத்தி சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. பருவமழை பெய்தபோது பருத்தி செடிகள் நோய் தாக்குதல் இன்றி காணப்பட்டது. ஆனால் தற்போது பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக பனியும்  இருப்பதால் பருத்தி செடியில் வேகமாக நோய் தாக்கியது. இதனால் பருத்தி  இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்பட்டு செடிகள் காயத்தொடங்கியது. மேலும் ஒரு சில இடங்களில் புழு தாக்குதல்  இருந்தது. இதனால் தற்போது மகசூலுக்கு வரும் போது பருத்தி மகசூல் பெருமளவில் பாதித்து வருகிறது. எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் ஒரு சில விவசாயிகள் செலவு செய்த பணத்தை எடுக்க முடியாத நிலை இருப்பதாக கூறுகின்றனர்.

Related Stories: