நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசு குறைப்பு

நாமக்கல், ஜன.28: நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று மேலும் 10 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 355 காசாக நேற்று என்இசிசி நிர்ணயம் செய்தது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 40 காசு வரை குறைந்துள்ளது. மற்ற மண்டலங்களில் விலை குறைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: