எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

நெல்லை மற்றும் சங்கரன்கோவில் இடையே மானூரில் மட்டுமே 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது. மானூர் தாலுகாவிற்குட்பட்ட மானூர், தாழையூத்து, வன்னிக்கோனேந்தல் பிர்க்காக்களில் 32க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களும், 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன. இதில் மானூர், உக்கிரன்கோட்டை, வன்னிக்கோனேந்தலில் ஆரம்ப சுகாதர நிலையங்களும் உள்ளன. இந்த பகுதியில் விபத்து உள்ளிட்ட எந்த அவசர தேவை என்றாலும் மானூரில் மட்டுமே 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இதனால் ஒரு சம்பவம் நடைபெறும்போது மற்றொருவர் தொடர்பு கொண்டால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே உயிரின் மதிப்பை கருத்தில் கொண்டு மானூர் தாலுகாவிற்கு கூடுதலாக 108 ஆம்புலன்ஸ்களை ஒதுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: