ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வாழப்பாடி, ஜன.24: ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. வாழப்பாடியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி,  போக்குவரத்து துறை, காவல்துறை, ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடந்தது. சிங்கிபுரம் தனியார் சிமெண்ட் நிறுவனத்திலிருந்து பேரணியை, வாழப்பாடி டிஎஸ்பி சூர்யமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், வாழப்பாடி தாசில்தார் ஜாஹீர் உசேன், ராம்கோ சிமெண்ட்ஸ் பொது மேலாளர் லட்சுமணன், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமண்யன், போக்குவரத்துறை ஆய்வாளர் தனபாலன், எஸ்ஐகள் சிவசக்தி, கிருஷ்ணன், நிறுவனத்தின் பணியாளர் துறை அலுவலர்கள் முனியசுவாமி, மணிவேல், பாதுகாப்பு அலுவலர் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணி ராம்கோ நிறுவனத்திலிருந்து வாழப்பாடி செல்லும் சாலை வழியாக பேருந்து நிலையம், வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் வரை சென்று திரும்பி வந்தது.

Advertising
Advertising

Related Stories: