கெங்கவல்லி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

கெங்கவல்லி, ஜன.24:  கெங்கவல்லி பேரூராட்சி 4வது வார்டு பகுதியை சேர்ந்த மாரி மனைவி சேஸ்மேரி(56). இவர் வலசக்கல்ப்பட்டி கிராமத்தில் பாக்கு தோப்பில், பாக்கு சேகரித்து அதனை  விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று வலசக்கல்ப்பட்டி கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணி என்பவரது பாக்கு தோப்பில், சேஸ்மேரி மற்றும் சோலையம்மாள் ஆகிய இருவரும் பாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது பாக்கு தோப்பில்  அறுந்து கிடந்த மின் கம்பியை, சேஸ்மேரி தெரியாமல் கையில் எடுத்த போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சேஸ்மேரி சடலத்தை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கெங்கவல்லி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்  பெரியசாமி தலைமையில், சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள், அறுந்து கிடந்த கம்பியை சரி  செய்தனர். இந்த விபத்து குறித்து விவசாய தோட்டத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: