திருச்சுழி நூலகத்தில் சிறப்பு பட்டிமன்றம்

திருச்சுழி, ஜன. 23: திருச்சுழி நூலகத்தில் குடும்ப நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பது கணவனா-மனைவியா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு புலவர் நகைமாமாணி, கணேசன் தலைமை வகித்தார். தேவாங்கர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை நேதாஜி சுவாமிநாதன், திருச்சுழி தேவாலய பாதிரியார் சத்தியசீலன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கணவனே என்ற அணியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முகவராக பணியாற்றும் தங்கராஜ், எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மீனாட்சி, பொது சுகாதாரத்துறையில் உதவியாளராகப் பணியாற்றும் கவிஞர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். மனைவியே என்ற தலைப்பில் தமிழாசிரியை சாந்தி, ஆசிரியைகள் ராஜராஜேஸ்வரி, செல்வலட்சுமி ஆகியோர் பேசினர். இந்து அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன் நடுவராக செயல்பட்டு மனைவி அணிக்குத் தீர்ப்பு வழங்கினார். முன்னதாக டி.மீனாட்சிபுரம் ஆசிரியை லதா நூலகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

Related Stories: