ஜெயங்கொண்டத்தில் பள்ளி பரிமாற்ற திட்டத்தில் கல்வி கற்றல்

ஜெயங்கொண்டம்,ஜன.22: ஜெயங்கொண்டத்தில் பள்ளி பரிமாற்ற திட்டத்தில் கல்வி கற்றல் நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் இணைந்து கற்றல் நிகழ்ச்சி வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ பள்ளியில் நடைபெற்றது. இதில் பெரிய கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களும் வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ பள்ளி மாணவர்களும் இணைந்து கல்வியை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை எளிய வழியில் கற்பது மற்றும் பாடத்தோடு தொடர்புடைய அறிவியலை எளிமையாக பகிர்ந்துகொள்வது மற்றும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு அருகிலுள்ள வங்கிதபால் அலுவலகம் போன்றவற்றிற்கு அழைத்து சென்று வங்கி கணக்கு துவங்குதல் வங்கியில் பணம் செலுத்துதல் பணம் பெறுதல் போன்ற படிவங்களை நிரப்புதல் ஆகியவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரஞ்சிதா மேரி தொன்போஸ்கோ பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்களுடன் நடைபெற்றது.

Related Stories: