சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா காப்பு கட்டுதல் உற்சவம்

க.பரமத்தி ஜன. 22: சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் மாசி மக பூக்குழி திருவிழா காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. க.பரமத்தி அருகேயுள்ள சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் 24ம் ஆண்டு பூக்குழி (தீமிதி) திருவிழா காப்பு கட்டுதல் விழா வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் 29வது கிலோ மீட்டரில் சூடாமணி மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில்

தினசரி அபிஷேகங்கள், முக்கிய விரத நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய விரத நாட்களில் மாசாணியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி வரும் 24ம் தேதி தை அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களால் 24ம் ஆண்டு பூக்குழி (தீமிதி) திருவிழா நடத்த தேதி நிச்சயிக்கப்பட்டு மாசாணி அம்மனுக்கு கங்கணம் கட்டப்பட்டு கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டு முளைப்பாரி இடப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (தீமிதி) இறங்க பக்தர்களுக்கு கங்கணம் கட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் அறக்கட்டளை மற்றும் கதர்மங்கலம், எல்லைமேடு ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: