பழங்குடி குழந்தைகளுக்கு இலவச டியூசன் சேவை

குன்னூர், ஜன.21:கம்யூனிட்டி போகஸ் சென்டர் சார்பில் பழங்குடி குழந்தைகளுக்கு இலவச டியூசன் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. குன்னூரில் இயங்கி வரும் கம்யூனிட்டி போகஸ் சென்டர் என்ற தன்னார்வலர்கள்  சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள சுண்டப்பட்டி என்ற பழங்குடி கிராமத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச டியூசன் சென்டர் துவங்கப்பட்டது.  உபதலை பகுதியை சேர்ந்த நோவா சிங் டியூசன் சென்டரை திறந்து வைத்தார்.   கம்யூனிட்டி போகஸ் சென்டர் தலைவர் ஜான் வெஸ்லி, பொருளாளர் செல்வராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  30 குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், சுகாதாரத்தை பாதுகாக்க சோப்புகள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.பட்டப்படிப்பு பயின்ற ஒருவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். தினந்தோறும் மாலை நேரங்களில் டியூசன் சென்டர் இயங்கும்.  குழந்தைகளுக்கு பொது அறிவு, ஆங்கில உரையாடல், கணினி பயிற்சி, உடற்கல்வி ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

Related Stories: