இன்றும், நாளையும் வீடு, வீடாக சொட்டு மருந்து வழங்கும் பணி

தேனி, ஜன. 20: தேனி மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 323 பணியாளர்கள் இன்றும், நாளையும் வீடு, வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.தேனி மாவட்டத்தில் நேற்று ஒரு லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் தொடங்கியது. 830 இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் மொத்தம் 3 ஆயிரத்து 323 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள முகாமில் கலெக்டர் பல்லவி பல்தேவ் சொட்டு மருந்து வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று மாலை வரை 94 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு, வீடாக தேடிச் சென்று இன்றும், நாளையும் சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடக்கிறது. மொத்தம் 3 ஆயிரத்து 323 பணியாளர்களும் இரண்டு நாள் வீடு, வீடாக சென்று தங்கள் பகுதியில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: