மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர் போக்சோவில் கைது

மணப்பாறை, ஜன.19: மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மதுரையை சேர்ந்தவர் கண்ணன்(48), லாரி டிரைவர். இவர் சென்னையில் கடந்த 6 வருடமாக முதல் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்தார். சேர்த்துக்கொண்ட அந்த பெண்ணுக்கு 17 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் காரைக்குடி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக லாரியில் அந்த பெண்ணுடன், 17 வயது மகளையும் அழைத்துக்கொண்டு காரைக்குடிக்கு சென்றார். வழியில் அந்த பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு, நீ காரைக்குடிக்கு பஸ்சில் வந்துவிடு என்று சொல்லிவிட்டு, மகளை மட்டும் அழைத்துக்கொண்டு கண்ணன் சென்றார். சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணியளவில் வையம்பட்டி அடுத்த கீரனூர் பாலம் அருகே சென்றபோது, மகளை லாரியில் இருந்து இறக்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதை எதிர்பாராத மகள் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு, கண்ணனை பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். வையம்பட்டி போலீசார் கண்ணனை மணப்பாறை மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் ரசியாசுரேஷ் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.

Advertising
Advertising

Related Stories: