வரப்புகளில் உளுந்து சாகுபடி தலைஞாயிறில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி திமுக கைப்பற்றியது

வேதாரண்யம், ஜன.14: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய தலைவராக தமிழரசி நேற்று அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஒன்றிய கவுன்சிலர்களில் நேற்று முன்தினம் தலைவர் தேர்தலில் கலந்து கொண்டு தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழரசியை தேர்வு செய்தனர். இவர் நேற்று அலுவலகத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், கஸ்தூரி மேலாளர் பக்கிரிசாமி மற்றும் ஒன்றிய அலுவலர்கள் திமுக ஒன்றியச் செயலாளர் மகாகுமார் பேருர் திமுக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேருராட்சி தலைவர் ராஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: