தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா

பெரம்பலூர், ஜன.13: தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். குழுமத்தின் துணைத்தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். ரோசா குருப் ஆஃப் ஹோட்டல்ஸ் மற்றும் கிரேஸ் கப் எண்டர்பிரைசஸ் (மலேசியா) இயக்குநர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். விழாவின் தொடக்கமாக கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இசைக்கருவிகள் முழங்க பறை கோலாட்டம், ஓயிலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நிகழ்த்தி மாணவிகள் வரவேற்றனர். அதன் பிறகு மாணவிகளுக்கு உரியடி போட்டிகள் நடைபெற்றது.

இப்பொங்கல் விழாவானது ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இக்கல்லூரியில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் சிறப்பினை மாணவிகள் பெரிய கோலத்தின் வழியாக வெளிப்படுத்தினர். சமத்துவ பொங்கல் விழாவை பார்வையிட்டு, தேங்காய் உடைத்து தீபம் காட்டி இறைவனுக்கு படையல் வைத்தபிறகு, நலம் உண்டாகும் பொருட்டு பசுவிற்கு சாதம் ஊட்டப்பட்டது. மகளிர் கல்லூரியில் உள்ள அனைத்து துறையை சார்ந்த மாணவிகளும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து மிகவும் குதூகலத்துடன் இப்பொங்கல் விழாவினை கொண்டாடினர். ஒவ்வொரு துறையின் குடில்களுக்கும் சென்று பொங்கல் விழாவினை பார்வையிட்டார். இதில் திறமையை வெளிக்காட்டும் விதத்தில் அழகான 14 குடில்களை அமைத்தனர். அக்குடில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தோட்டத்துடன் அமைந்திருந்தது. அதன் பிறகு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பொங்கல் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர் துணை முதல்வர் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். விழா முடிவில் தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் தேவகி நன்றி கூறினார்.

Related Stories: