திருப்பூர், ஜன.12: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது:
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாளையொட்டி, கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. முதல் பரிசாக ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.2 லட்சம், நான்காம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.