வேலை இழந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

அவிநாசி,ஜன.10:விசைத்தறி தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி, அவிநாசியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழுக் கூட்டம் அவிநாசியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சந்திரன், மாநில பொருளாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டு கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உடனடியாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். இலவச மின்சாரம் விசைத்தறிக்கு தொடரவேண்டும். முறைசாரா பிரிவு தொழிலாளர்களுக்கு முற்றிலும் முடங்கியுள்ள பென்சன் உள்ளிட்ட பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: