குன்னூர் ரயில் நிலையத்தில் பொங்கல் விழா கோலாகலம்

குன்னூர், ஜன.10: குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடினர். குன்னூரில் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழா நேற்று கொண்டாடினர். அதில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சிலை அணிந்து சுற்றுலா பயணிகளுடன் இணைந்து கிராமத்தில் கொண்டாடுவதுபோல மண்பானையில் பொங்கல் வைத்து விவசாயம் செழிக்க பிராத்தனை செய்தனர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்தனர். பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி ரயில் நிலையத்தில் கோலங்கள் மற்றும் மா இலை தோரணங்களுடன் ரயில் நிலையம் புது பொலிவுடன் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கினர். பின்னர் அனைவருக்கும் அறு சுவை உணவு பரிமாறப்பட்டது. இதில் ரயில்வே ஊழியர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: