கும்மிடிப்பூண்டி அருகே வெறி நாய்கள் தொல்லை

கும்மிடிப்பூண்டி, ஜன. 10 : கும்மிடிப்பூண்டி அருகே குருவியகரம் கிராமத்தில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்கவும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும் ஊராட்சி மன்ற தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை ைவத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரெட்டம்பேடு, ஆண்டித்தோப்பு, ரெட்டம்பேடு காலனி, குருவியகரம் உள்ளிட்ட பகுதி மாணவ, மாணவிகள் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு நடந்து செல்கின்றனர், வேலைக்கு செல்லும் தினக்கூலியாட்கள் மற்றும்  விவசாயிகள் என பல தரப்பட்டவர்களை நடமாடுகின்றனர். அவர்களை தெருநாய்கள் துரத்தி கடிக்கிறது. சைக்கிளில் செல்பவர்களை பின்தொடர்ந்து வேகமாக துரத்துவதால் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனால்,  குருவியகரம் கிராம மக்கள் தயமின்றி நடமாட அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் குருவியகரம் கிராம குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக ரேஷன் கடை அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து, பொங்கல் பரிசு வாங்க 50க்கும் மேற்பட்ட பெண்கள், அங்குள்ள ரேஷன் கடை முன் கூடி, வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெறிநாய் ஒன்று அருகே கடிப்பதைபோன்று ஓடி வந்ததால் பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் ஒரு சிலருடைய கால்நடைகளை வெறிநாய்கள் கடித்துள்ளன. இதனால், பலவிதமான நோய்கள் கால்நடைகளுக்கு ஏற்பட்டு இறந்துள்ளது. இது குறித்து அப்போதைய ஊராட்சி செயலாளரிடம் புகார் செய்தும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.  இனியாவது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடிக்கவும், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: