பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்

பாப்பாரப்பட்டி, ஜன.9:பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகிறதா என, பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் தலைமையில், அலுவலக பணியாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். இதில், வணிக நிறுவனங்களில் பயன்படுத்திய, 2கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ₹2ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: