மரக்கன்றுகள் நடும் விழா

ஓசூர், மே 16: ஓசூரில் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், சந்திரசூடேஸ்வரர் மலையில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக, சுமார் 1000 மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். இதில் புங்கன், ஆலம், அரசமரம், வேம்பு, வில்வம், நாவல், அத்தி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு ரக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மலையை சுற்றி உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகளை சொட்டு நீர் பாசனம் மூலமாக பராமரித்து வருகின்றனர். நிகழ்ச்சியில், அறக்கட்டளையினர் பழனிவேல், சிவக்குமார், ராஜமாணிக்கம், ராதாகிருஷ்ணன், முருகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: