ஜமால் முகமது கல்லூரி பட்டமளிப்பு விழா 1,135 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

திருச்சி, ஜன.7: திருச்சி ஜமால் முஹம்மது தன்னாட்சிக் கல்லூரியின் சுயநிதி ஆண்கள் பிரிவிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் 1,135 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், ‘வாழ்வில் பட்டம் பெறுவதோடு, பண்புடனும்-ஒழுக்கத்துடனும்-அடக்கத்துடனும் நடந்துகொண்டால் வெற்றிமேல் வெற்றி காணலாம். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களாகிய உங்களிடம்தான் உள்ளது. அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க குறைந்தபட்ச தகுதி இளநிலை பட்டப்படிப்பு. அறிவியல், விஞ்ஞானம், கணினி அறிவியல், தொழில்நுட்பம் என பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில், ஒவ்வொரு துறையிலும் இளைஞர்கள் கால்பதித்து சாதனை படைக்க விடா முயற்சி அவசியம்’ என்றார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஜமால் முஹம்மது உள்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் முகமது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர் முகமது சிஹாபுதீன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: