போலீஸ் ேராந்து வாகனம் மீது அரசு பஸ் மோதல்

பெரம்பலூர்,ஜன.7: பெரம்ப லூர் அருகே தேசிய நெடு ஞ்சாலையில் சென்று கொ ண்டிருந்த ஹைவே பேட் ரோல் எனப்படும் நெடுஞ் சாலைத்துறை போலீஸ் ரோந்து வாகனம் மீது, பின் னால் வந்த அரசுபஸ் மோ திய விபத்தில் சாலையோ ரம் உருண்டு சென்று போலீஸ்வாகனம்கவிழ் ந்தது. இதில் எஸ்எஸ்ஐ, டிரைவர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் அரசு போக்குவ ரத்துக் கழகத்தைச் சேர்ந்த அரசு பஸ் ஒன்று, பாண்டிச் சேரியிலிருந்து புறப்பட்டு நேற்று காலை திருச்சி நோ க்கி சென்று கொண்டிருந் தது. கடலூர் மாவட்டம், காவிரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் இளங்கோ (55) என்பவர் பஸ்சினை ஓட்டி வந்தார். பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடு ஞ்சாலையில், மங்கலமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட வாலிகண்டபுரம் கருப்பை யா கோயில் எதிரே வேக மாக வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஹைவே பேட்ரோல் -1 வாகனத்தின் மீது மோதியது. இதனால் ஹைவே பேட்ரோல் வாக னம் சாலையோர இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து உரு ண்டது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தில் இரு ந்த எஸ்எஸ்ஐ ரகுபதி, டிரைவர் ராமராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்துத் தகவலறி ந்து அங்கு வந்த மங்கல மேடு போலீசார் மற்றும் ஹைவே பேட்ரோல் மீட்பு வாகனம், பள்ளத்தில் கிட ந்த போலீஸ் வாகனத்தில் காயங்களுடன் அவதிப்பட் டுக் கொண்டிருந்த 2பேரையும் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்த னர். தகவலறிந்து ஆயுதப் படை டிஎஸ்பி ரவி அரசு மரு த்துவமனைக்கு நேரில் செ ன்று சிகிச்சை பெறுவோ ரைப் பார்வையிட்டு ஆறு தல் கூறினார். அரசு பஸ் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தால் அதில் வந்த அனைவ ரும் வேறு பஸ்சில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மங்கள மேடு இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் இளங்கோவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: