ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றி பெற்ற பட்டதாரி பெண்

அயோத்தியாப்பட்டணம், ஜன.3: பூவனூர் மற்றும் சுக்கம்பட்டி கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட பட்டதாரி பெண் வெற்றி பெற்றார். அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், 3வது வார்டு  பூவனூர் மற்றும் சுக்கம்பட்டி கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் 22 வயதான பட்டதாரி இளம்பெண் பீரித்தி மோகன் போட்டியிட்டார். இவர் எதிர்த்து பாமக சார்பில், பூங்கோதை செல்வம் போட்டியிட்டார். இந்நிலையில் ப்ரீத்தி தேர்தலில் 2204 வாக்குகள் பெற்றார். பூங்கோதை செல்வம் 1154 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ப்ரீத்தி 1050 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபார்.  தற்போது தொலைநிலைக்கல்வி முறையில் முதுநிலை ஆங்கிலம் படித்து வரும் ப்ரீத்தி, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பாடுபடுவேன் என்றார். வெற்றிபெற்ற ப்ரீத்திக்கு திமுகவினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: