மாநில சாஃப்ட்பால் போட்டியில் திருச்சி சிறுவர் அணி சாம்பியன்

திருச்சி, டிச.31: திருவள்ளூரில் நடந்த மாநில சாஃப்ட்பால் போட்டியில் திருச்சி சிறுவர் அணி சாம்பியன் பட்டத்தையும், சிறுமியர் அணி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம் நெமிலியில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஜினியரிங் கல்லூரி மைதானத்தில் ஆறாவது மாநில அளவிலான சிறுவர், சிறுமியருக்கான சாஃப்ட் பால் போட்டி கடந்த டிசம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது.  இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அணிகளும் பங்கேற்றன. சிறுவர் பிரிவில் தகுதிச்சுற்று, கால் இறுதி, அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட அணிக்கும், சென்னை மாவட்ட அணிக்கும் இறுதி போட்டி நடந்தது. இதில் 19-8 என்ற ரன்கள் கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல சிறுமியர் பிரிவில் திருச்சி மாவட்ட அணி வெண்கலப்பதக்கம் வென்றது. வெற்றி பெற்ற இரு அணி வீரர்களுக்கும், திருச்சி மாவட்ட சாஃப்ட் பால் சங்க காப்பாளர் அசோக், தலைவர் வெங்கடேஷ்துரை, செயலர் சரவணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.திருச்சி, டிச.31: திருச்சியில் நடந்த அரசு போக்குவரத்து கழகங்களின் சம்மேளன அமைப்பு சிறப்பு மாநாட்டில் வருகிற 8ம்தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு நிலை சிறப்பு மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. டிஎன்எஸ்டிசி சங்க திருச்சி மண்டல தலைவர் மணி தலைமை வகித்தார். திருச்சி மண்டல பொதுச்செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். இதில் கஜேந்திரன், அசோகன், குருசாமி, சுப்ரமணியன், டி.சுப்ரமணியன், தயானந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து உடனடியாக பேச வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களின் வரவு-செலவு பற்றாக்குறையை முழுமையாக தமிழக அரசு வழங்க வேண்டும், அனைத்து பிரிவுகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும். அனைத்து கிளைகளிலும் தரமான உணவு, குடிநீர் வழங்க வேண்டும், 240 நாட்கள் பணி முடித்தவர்களை முன் தேதியிட்டு பணி நிரந்தரப்படுத்த வேண்டும். நிலுவை தொகை வழங்க வேண்டும். 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ம் தேதி நடைபெறம் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும். ஏஐடியூசி நூற்றாண்டு விழாவை அனைத்து மண்டலங்கள், கிளைகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் திருச்சி, நெல்லை, வேலூர், தர்மபுரி, நாகர்கோவில் விரைவு போக்குவரத்து, திருவண்ணாமலை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: