கோவை, டிச.31: கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிபோதையில் இருந்தால் உள்ளே செல்ல அனுமதியில்லை என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். கோவை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரும். இதனால், கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சாடிவயல் செக் போஸ்டில் இருந்து அடர் வனப்பகுதி வழியாக நீர்வீழ்ச்சிலாரல் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கோவை, டிச. 31: கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பிராத்தனை பாடலுடன் விழா துவங்கியது. பள்ளியின் தாளாளர் பிராங் டேவிட் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் மார்கரெட் தேவ கிருபை முன்னிலை வகித்து பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார்.