தஞ்சாவூர் சமயபுரத்துக்கு பாதயாத்திரை செல்லும் திருவலஞ்சுழி கோபாலகிருஷ்ணனுக்கு திருவையாறில் உற்சாக வரவேற்பு

திருவையாறு, டிச. 30: சுவாமிமலை அடுத்த திருவலஞ்சுழியில் இருந்து கோபாலகிருஷ்ணன் சுவாமி உலக நன்மைக்காக பாதையாத்திரையாக புறப்பட்டு கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோயிவிலுக்கு சென்று வழிபடுவர். இந்தாண்டு 27வது ஆண்டு பாதயாத்திரை திருவலஞ்சுழியில் இருந்து கோபாலகிருஷ்ணன் சுவாமி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாலை அணிவித்து அவர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதையாத்திரையாக புறப்பட்டு வந்தார். திருவையாறு கடைவீதியில் கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு ஆண்டவர் அல்வா கடை உரிமையாளர் பரமேஸ்வரி கணேசமூர்த்தி மற்றும் குடும்பத்தினர், வணிகர்கள் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். கோபாலகிருஷ்ணன் சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருக்காட்டுப்பள்ளி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது கிடையாது. மாறாக சிறப்பு ரயில்களை ஸ்வீதா கட்டணத்தில் இயக்கி ஆம்னி பஸ்களை போல் காசு பார்க்கிறது. பயணத்தை கடைசி நேரத்தில் 2 அல்லது  3 மணி நேரம் முன் ரத்து செய்தால் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட ரயில்வே திரும்ப தருவதில்லை. அதே நேரம் அந்த பர்த்தை கரண்ட் புக்கிங்கில் வேறு ஒரு பயணிக்கு விற்று எடுத்துக் கொள்கிறது.

Related Stories: