மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள் அகற்றம்

பேராவூரணி,மே20:தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் மீன் பிடி துறைமுக பகுதிகளில் மீன்பிடி தடை காலத்தையொட்டி விசைப்படகுகள் மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீனவர்கள் விசைப்படகில் சென்று மீன் பிடிக்க தடையுள்ளது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 152 விசைப்படகுகளும் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தடைக்காலத்தில் பழுதடைந்த விசைப்படகுகள் கரை ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணி, படகுகளுக்கு வர்ணம் பூசுதல்,வலைகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவது வழக்கம்.
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தடைகாலம் முடியும் வரை விலை உயர்ந்த மீன்கள் கிடைக்காது. நாட்டுப்படகு மூலம் பிடிக்கும் மீன்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. படகுகளை பழுது நீக்கம் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகின்றதால் அரசு மான்யத்தில் கடன் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

The post மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: