முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பெரம்பலூர் மாவட்டத்தில் 77.40% வாக்குப்பதிவு

பெரம்பலூர்,டிச.28: பெரம்ப லூர் மாவட்டத்தில் 2ஒன்றியங்களுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 77.40 சதவீத வாக்குகள் பதிவானது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(27ம்தேதி) முதல் கட் டமாக பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களுக்கு உட் பட்ட 293 வாக்குச் சாவடி களில் வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 146 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 19 ஊராட்சி மன்றத் தலைவர், 14ஒன்றியக் கவுன்சிலர், 2மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 181பதவியிடங்க ளுக்கு 607பேர் களத்தில் இருந்தனர்.

வேப்பூர் ஒன்றியத்தில் 232 கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர், 32 ஊராட்சி மன்றத்தலைவர், 23 ஒன்றியக்கவுன்சிலர், 2 மா வட்ட ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 289 பதவியிடங்களுக்கு 937பேர் களத் தில் போட்டியிட்டனர். மொத்தத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவில் மட்டும் 470பதவியிடங்களுக்கு, 1,544பேர் களத்தில் இருந்தனர்.இதனையொட்டி நேற்று காலை 7மணிக்குத் தொட ங்கி மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெற் றது. இதில் 7-9மணி நிலவ ரப்படி மொத்தமுள்ள 1,90, 058 வாக்காளர்களில் 14,768 ஆண்வாக்காளர்கள், 13,214 பெண்வாக்களர்கள், 1இதர வாக்காளர் என 27,983பேர் வாக்களித்திருந்தனர். வா க்கு சதவீதம் 14.72 ஆகும்.

9-11மணி நிலவரப்படி மொத்தமுள்ள 1,90, 058 வாக்காளர்களில் 23,980 ஆண்வாக்காளர்கள், 24,803 பெண்வாக்களர்கள், 1இதர வாக்காளர் என 48,784பேர் வாக்களித்திருந்தனர். வாக்கு சதவீதம் 25.67 ஆகும்.11-1மணி நிலவரப்படி 39,184 ஆண்வாக்காளர்கள், 45,254 பெண்வாக்களர்கள், 1இதர வாக்காளர் என 84,439பேர் வாக்களித்திருந்தனர். வா க்கு சதவீதம் 44.43 ஆகும்.1-3மணி நிலவரப்படி 52,526 ஆண்வா க்காளர்கள், 63,579 பெண் வாக்களர்கள், 1இதர வாக் காளர் என 1,16,106 பேர் வாக்களித்திருந்தனர்.வாக் கு சதவீதம் 61.09ஆகும்.3-5மணி என இறுதி நிலவ ரப்படி மொத்தமுள்ள 1,90, 058 வாக்காளர்களில் 67,286 ஆண்வாக்காளர்கள், 79,821 பெண்வாக்களர்கள், 2இதர வாக்காளர்என 1,47,109பேர் வாக்களித்திருந்தனர். வாக்கு சதவீதம் 77.40 ஆகும்.

Related Stories: