ஊட்டி ஓட்டல்களில் விலை உயர்வு உள்ளூர் மக்கள் திணறல்

ஊட்டி, டிச. 27:  ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  ஊட்டியில் தற்போது பெரும்பாலான ஓட்டல்களில், உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண புரோட்டா ஒன்று ரூ.10 முதல் 25 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான கடைகளில் தற்போது புரோட்டோ ஒன்று ரூ.25 முதல் 30 வரை விற்கப்படுகிறது. இதே போன்று இட்லி, ரோஸ்ட், மத்திய சாப்பாடு உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றங்கள் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. ஆனால், உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் வழக்கம் போல் ஓட்டல்களில் சென்று உணவு சப்பிட்டு விட்டு, பில்லை பார்த்ததும் அதிர்ச்சியடைகின்றனர். பொதுவாக கட்டணம் உயர்த்தப்பட்டால், ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்படும். ஆனால், இம்முறை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படாமல் சில ஓட்டல்

களில் உணவு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  கட்டணங்களை சத்தமின்றி உயர்த்தியுள்ளதால் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: