சென்னை சென்ட்ரலில் கிரேட் பாம்பே சர்க்கஸ்

சென்னை: உலக புகழ்பெற்ற கிரேட் பாம்பே சர்க்கஸ் மீண்டும் பெருத்த ஆர்ப்பரிப்புடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு வருகிறது. இந்தியா, ரஷ்யா, எத்தியோப்பியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை உள்ளடக்கிய  இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்ஐஏஏ மைதானத்தில் நடைபெறுகிறது. மனித பிரமிட், கலர் வாட்டர், டபுள் டபோலா, ஹாட்  ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட 14 வகையான சாகசங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன. தினசரி மதியம் 1 மணி, மாலை 4 மணி மற்றும் 7 மணி என 3 காட்சிகள் நடைபெறும். டிக்கெட் விலை 300, 200, 300. பொதுமக்கள் 78418 27967, 88936  06308, 96337 80878 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, டெலி புக்கிங் ₹300ல் செய்துகொள்ளலாம், என கிரேட் பாம்பே சர்க்கஸ் மேலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: