கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி குத்துச்சண்டை போட்டி ஜெ.ஜெ.கல்லூரி சாம்பியன்

புதுக்கோட்டை, டிச.18: பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடந்த குத்து சண்டை போட்டியில் ஜெஜெ கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.பாரதிதாசன் பல்கலை கழக அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் புதுக்கோட்டை அருகே உள்ள ஜெ.ஜெ கல்லூரி கலை அறிவியல் கல்லூரியில் 16,17ம்தேதி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்று ஜெ.ஜெ. கல்லூரி அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று ஆண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அகில இந்திய பல்கலை கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: