ஆரணி, டிச.16: ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.அதன்படி, ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி 4, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 36 பதவியிடங்கள் உள்ளன. அதில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவிற்கு 3 இடங்களும், பாமகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 36 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவிற்கு 27 இடங்களும், பாமகவிற்கு 7 இடமும், தேமுதிகவிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.