பாபநாசம் கல்லூரியில் மின்நூலக துவக்க விழா

வி.கே.புரம், டிச. 12: பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகம் சார்பில் தேசிய மின்நூலக துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை வகித்தார். மாணவர்கள்  சங்கரபாண்டியன், சிவசூரியா, சவுந்திரபாண்டி, பிரமுஅம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் பாலச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்டம் எஸ்எஸ்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சங்கர ராமபாரதி கலந்து கொண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழக நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய மின்நூலகத்தை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து ‘வாசிக்கலாம் வாங்க’ என்னும் தலைப்பில் பேசினார். இதில் கல்லூரி நிர்வாக அதிகாரி நடராஜன், பேராசிரியர்கள் வீரலெட்சுமி, சைலஜா, சாமுவேல் ஜெயராஜ், தேவிக்யுபா, ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ஆனந்த், மற்றும் சிவதாணு, சிவராஜ், சந்தானசங்கர் உட்பட பலர் செய்திருந்தனர்.

Related Stories:

>