வானம் தெளிவாக காணப்படும். அரசு வேலை நபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரிப்பு

பழநி, டிச. 12: அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களை குறித்து வைக்கும் பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்கள், மாணவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சரூரமப் பணியாளர் குழுமம் போன்ற அமைப்புகள் மூலமும், மத்திய அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள், யூபிஎஸ்இ, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி மூலமும்- வங்கி காலியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமும் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் உள்ள காலியிடங்கள் அந்த நிறுவனங்கள் மூலமும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், குறுக்கு வழியில் அரசு வேலை பெறலாம் என்ற தவறான எண்ணத்தில் பல பெற்றோர்களும், மாணவர்களும் அறியாமையின் காரணமாக அரசு வேலைக்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, அரசின் காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகளின் மூலமே நிரப்பப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்கும் என்பது நிஜமல்ல. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்கள் சரியாகப் படித்து, தேர்வு எழுதினாலே போதும். அரசு வேலையின் மோகத்தால் பெற்றோர் மற்றும் மாணவர்களின் சரியான புரிதல்இன்மையை பயன்படுத்தி ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணங்களை சுருட்டி வருகின்றனர். குறிப்பாக பல அதிகாரிகளே தரகர்களாக மாறி உள்ளது வேதனைக்குரியது. போட்டி நிறைந்த உலகில் ஏமாற்றுபவர்கள் ஏராளம். இவர்களிடமிருந்து பெற்றோர்களும், மாணவர்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Related Stories: