இந்தநாள் மழையால் நிரம்பியது சித்தையன்கோட்டை ஆண்டிக்குளத்தில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை

திண்டுக்கல், டிச. 12: சித்தையன்கோட்டை ஆண்டிக்குளத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனையில் ஈடுபட்டு வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்டது ஆண்டிக்குளம். சுமார் 5 ஏக்கர் பரப்பிலான இந்த குளம் தூர்ந்து போய் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவுநீர் இங்கு தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் எப்போதுமே குறைவாக இருக்கும். இச்சூழலை பயன்படுத்தி இங்குள்ள 3 சென்ட் இடத்தில் மர்மநபர்கள் கஞ்சா விவசாயம் செய்துள்ளனர். இங்கு விளைந்த கஞ்சாவை செம்பட்டி, புல்வெட்டி கண்மாய், பாளையங்கோட்டை, சொக்கலிங்கபுரம் பகுதியில் ஜோராக விற்பனை செய்துள்ளனர்.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆண்டிக்குளம் பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு சுமார் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார் அவற்றை பறித்து அங்கேயே தீயிட்டு அழித்தனர். மேலும் வழக்குப்பதிந்து கஞ்சா செடி வளர்த்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அன்று மாலை போலீசார் சந்தேகத்தின்பேரில் அழகர்நாயக்கன்பட்டி, புதுப்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: