துறைமங்கலம் அன்பகம் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

பெரம்பலூர், டிச.12: பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் துறைமங்கலம் அன்பகம் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட காவ ல்துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் துறைமங்கலம் அன்பகம் சிறப்பு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்ப ட்டது. இந்த முகாமிற்கு பள்ளியின் தாளாளர் செல்வம் தலைமை வகித்தார். மைய பொறுப்பாளர் ஷகிலா பானு, எஸ்ஐ விஜய லெட் சுமி, தாய்வீடு தொண்டு நிறுவன தலைவி ரேவதி, வளைகரங்கள் சங்கத் தலைவி அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன் ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார்.

இதில் டாக்டர்கள் சவீதா, மின்னல்துல் முபித்தா ஆகியோர் தலைமையி லான குழுவினர் மனநலம் குன்றிய, வாய்பேச முடி யாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர். முகாமில்100க் கும் மேற்பட்ட மாணவ, மா ணவிகள் பயன் அடைந்த னர். முன்னதாக பயிற்சி ஆசிரியர் ஜூலியட் நிர்மலா வரவேற்றார். முடிவில் பொறுப்பாளர் நதியா நன்றி கூறினார்.

Related Stories: