பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட துவங்கியது

பெரம்பலூர்,டிச.12: பெரம்ப லூரில் உள்ளாட்சித் தேர் தல் களைகட்டத் தொடங்கி யது. பாராளுமன்றத் தேர்தலைப்போல், பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு 20க்கும் மேற் பட்ட வாகனங்களில் ஊர் வலமாக வந்து, பட்டாசுகளை வெடித்து மனுதாக் கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அளவில் உள்ளாட் சித் தேர்தல் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் 2 கட்டங்க ளாக நடத்தப்படுகிறது. இதன்படி முதல் கட்டமாக 27 ஆம் தேதியும், இரண் டாம் கட்டமாக 30ஆம் தேதி யும் நடக்கிறது. இதற்காக கடந்த 9ம் தேதி முதல் 16ம்தேதி வரை வேட்புமனு க்கள் பெறப்படுகிறது.

இதில் உள்ளாட்சித் தேர்த லுக்குத் தடைகோரிய உச்ச நீதிமன்ற வழக்கு காரண மாக கடந்த இரண்டு நாட்க ளாக மந்தமாகக் காணப் பட்ட மனுத்தாக்கல், நேற்று 9 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களுக்குத் தடையின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியானதை யொட்டியும், மங்கலகரமான முகூர்த் தநாள், முழு பௌர்ணமி நாள், என்பதாலும் மனுத் தாக்கல் காலை முதலே களைகட்டத் தொடங்கியது. இதற்காக பெரம்பலூரில் பாராளுமன்றத் தேர்தலுக்கு செலவு செய்து, அளவுக்கு அதிகமான ஆட்களை அழைத்து வருவது போல், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு, தங்கள் ஆதரவையும், செல்வாக்கையும் காட்டுவதற்காகவும், பொதும க்களுக்கு தான்தான் வெற்றி வேட்பாளர் என்பதை காட்டுவதற்காகவும், அதை விட சட்டமன்ற பொதுத்தேர்தலைப்போல உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகள் 20சதவீதம் கூட கடைபிடிக்கப் படாத தாலும், மினி வேன், டாட்டா ஏஸ் உள்ளிட்ட 20க்கு மேற் பட்ட வாகனங்களில் 200க் கும் மேற்பட்ட ஆதரவாளர் களை, ஆடம்பரமாக அழை த்து வந்து, பட்டாசுவெடித் து, மனுத்தாக்கல் செய்யப் பட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதற்காக நேற்று செங்குணம் ஊராட்சியில் இருந்து ஊராட்சித் தலைவர் பதவி க்குப் போட்டியிட, மனு தாக் கல் செய்ய வந்தப் பெண் வேட்பாளருக்கு ஆதரவா கத்தான் இவ்வளவுபேர் திர ண்டு வந்திருந்தனர். இத னால் பெரம்பலூர் பாலக் கரையில் இருந்து, துறை மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையிலான சாலைப் போக்கு வரத்து ஸ்தம்பிக் கும்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: