விஸ்வநாதபேரியில் நாளை மின்தடை

புளியங்குடி, டிச.11: கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையங்களில் நாளை(12ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சிவகிரி, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி, வடுகபட்டி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டபொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கடையநல்லூர் செயற் பொறியாளார் நாகராஜன் அறிவித்துள்ளார்.

Related Stories:

>